Wednesday, July 7, 2010

“எந்திரன் பிரமாதமா வந்திருக்கு” – ரஹ்மான் சர்டிபிகேட்!

ஒரு படம் சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டுமெனில், அட்டகாசமான, பாடல்கள் அவசியமானது. அதிலும் பாடல்கள் கருத்தாழம் மிக்கவையாக இருக்கவேண்டும். எந்திரன் பாடல்களை பொறுத்தவரை அதன் மிகப் பெரிய பலம் – கவியரசு வைரமுத்து. தேன் தமிழில் வைரமுத்து புகுந்து விளையாடியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதோ அதை மெய்ப்பிப்பது போன்ற ஒரு செய்தி.

கவியரசு வைரமுத்து, எந்திரனில் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்த மூன்று பாடல்கள் மீதும் ரஜினி-ரஹ்மான்-ஷங்கர் ஆகிய மூவர் கூட்டணிக்கு கொள்ளை பிரியமாம். அத்துணை பிரமாதமாக வந்துள்ளனவாம் அந்த பாடல்கள்.
எந்திரனில் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருப்பது தெரியும் (ரோபோ தவிர்த்து). தனது தொழிலை ஆழமாக நேசிக்கும் ஒரு விஞ்ஞானி ஒரு பெண்ணை காதலித்தால் எப்படியிருக்கும்? அந்த சூழலுக்கு பொருத்தமாக முழுதும் விஞ்ஞான மொழியில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு சில வரிகள் : "வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசி அறியும். இந்த காதல் பூச்சி கண்களால் ருசி அறியும்" என்பது போன்ற அறிவியல் வரிகள் பாடல் வரிகளாகியிருக்கின்றன.
அடுத்த பாடலில் ஒரு ரோபோ உருவாகும் தொழில்நுட்பம் குறித்தும் பாடல் எழுதியிருக்கிறார் வைரமுத்து. மற்றொரு பாடலில் தீவிரமான வன்முறை காதல் குறித்தும் பாடல் எழுதியிருக்கிறார் கவியரசு. (ரோபோவுக்கு ஐஸ்வர்யா மீதும் ஏற்படும் காதல் தானே வைரமுத்து சார்?)
எந்திரன் படம் மிக நன்றாக உருவாக்கப்பட்டிருப்பதாக படம் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்துவிடம் சிலாகித்து கூறினாராம். ஆனால் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று ஏக பெருமூச்சு விடுகிறார் கவியரசு!
(7.7.2010 குமுதம் இதழில் வைரமுத்து அளித்துள்ள பேட்டியிலிருந்து…)



--
http://www.co5.in/

No comments:

Post a Comment