Wednesday, July 7, 2010

இது எந்திரன் ஸ்பெஷல் Tidbits! டக்கரான ட்ரெயிலர் தயார் & எந்திரனை வாங்க லக்ஷ்மி மிட்டல் முயற்சி?



1) எந்திரன் – ட்ரெயிலர் ரெடி !
எந்திரன் ட்ரெயிலர் தயாராகிவிட்டது. சமீபத்தில் எந்திரன் ட்ரெயிலரை தயார் செய்த ஷங்கர் ரீ-ரெக்கார்டிங்குக்காக அதை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனுப்ப, அதை பார்த்து வியந்த இசைப்புயல் ட்ரெயிலரை கட் செய்த எடிட்டர் ஆண்டனிக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்தாராம்.

விரைவில் ட்ரெயிலர் சென்சாரின் அனுமதிக்காக செல்லவிருக்கிறது. சிவாஜியைப் போல, திரையரங்குகளில் ட்ரெயிலரை ஒளிபரப்பும் திட்டம் இருக்கிறது. ஆடியோ வெளியீடு முடிந்தவுடன் அது குறித்து முடிவு செய்யப்படும்.



2) எந்திரனை ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் ரிலீஸ் செய்ய முயன்று வருகிறோம் – ரசூல் பூக்குட்டி

ட்விட்டரில் பரபரப்பாக இருக்கும் ரசூல், படத்தை எப்படியும் ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குள் கொண்டு வர முயன்று கொண்டிருப்பதாக எந்திரன் செய்தி பிரியர்களுக்கு கூறியிருக்கிறார்.

படத்தின் தமிழ், மற்றும் தெலுங்கு டப்பிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ஹிந்தி டப்பிங் அநேகமாக முடிந்தே விட்டது என்று கூறலாம். (சூப்பர் ஸ்டார் தமிழுக்கு மட்டும் தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது!)

(தகவல் உதவி: மணிகண்டன்)



3) உலக அழகியின் எதிர்பார்ப்பு…

என்ன தான் உலக அழகி என்றாலும், பட ஹிட் என்பது அவசியம் தானே… ஐஸ்வர்யா ராயின் போட்டி நடிகைகள் கதிரீனா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹிட்டுக்கள் மேல் ஹிட்டுக்களாக குவித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் தற்போது எந்திரனை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

தான் பெரிதும் எதிர்பார்த்த 'ராவணன்' கைவிரித்துவிட்ட நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகப்போகும் எந்திரன் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று உலக அழகி நம்புகிறார். (யாருக்காக யார் – உண்மையா – வெயிட் பண்றாங்கன்னு இப்போ புரிஞ்சிருக்குமே…!)



4) எந்திரன் வெளியீட்டு உரிமை : பிரபல தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் முயற்சி?

வதந்தியோ உண்மையோ கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. பிரபல ஸ்டீல் தொழிலதிபரும் பிரிட்டனின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான லக்ஷ்மி மிட்டல் எந்திரனின் வெளியீட்டு உரிமையை வாங்க முயற்சித்து வருகிறாராம். (இரும்பு சுரங்கம் தோண்டுரவருக்கு தங்க சுரங்கம் மேல ஆசையா? அடி தூள்.)

இதற்கிடையே படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளை இசைப்புயல் இன்னும் முடிக்க வேண்டியிருப்பதால் படம் மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி ரிலீஸ் என்று முதலில் கூறப்பட்டாலும் இதன் மூலம் படம் மேலும் தாமதாமாகும் என்று கூறுகிறார்கள். எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் என்பது மட்டும் உறுதி. (நன்றி – Times of India)


--
http://www.co5.in/

No comments:

Post a Comment